சென்னை அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை- குஜராத் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்களின் முடிவில் 231 ரன்கள் குவித்தது.
232 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 196 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.