ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 60 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் காபுல், பஹ்லன் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. , கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
மேலும்,மீட்பு நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.