புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அருகே, பத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சுமி நகரில் 10-ற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் நடமாடி வந்தன. இந்த நாய்களுக்கு அப்பகுதி மக்கள் தினமும் உணவளித்து வந்தனர்.
இந்நிலையில், 12 நாய்கள் தெருவில் ஆங்காங்கே சுருண்டு விழுந்து உயிரிழந்த நிலையில் இருந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.