ஈரோட்டில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 1 சவரன் தங்க நகையை மீட்டனர்.
திண்டல் பாலாஜி கார்டனை சேர்ந்த பரிமளா கடந்த 1-ஆம் தேதி சிவன் நகரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகையை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து பரிமளா அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், திருப்பூரைச் சேர்ந்த முத்துக்குமார், ஜனா ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த 1 சவரன் நகையை மீட்டனர்.
















