அட்சய திருதியை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் நகைகள் வாங்குவதற்காக ஏராளமானோர் திரண்டனர்.
அட்சய திருதியை ஒட்டி ஏராளமான பொதுமக்கள் தங்க நகைகள் வாங்குவது வழக்கம், அந்த வகையில் திருச்செந்தூர் சுற்று வட்டாரத்தில் உள்ள நகைக்கடைகளில் புதிய நகைகள் வாங்குவதற்காக ஏராளமானோர் திரண்டனர்.
இதனால் கூட்டம் அலைமோதியது. வழக்கமாக இரவு 9 மணி அளவில் மூடப்படும் கடைகள், நேற்று நள்ளிரவு 12 மணி வரை கடைகள் இயங்கின.