தூத்துக்குடி அருகே மது அருந்தும் போது நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்தி கொல்லப்பட்டார்.
கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த முத்துப்பாண்டி தனது நண்பர்களுடன் பீர் அருந்த காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது பீர் வாங்குவது தொடர்பாக முத்துப்பாண்டிக்கும், அவரது நண்பர் மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், கத்தியால் முத்துப்பாண்டியை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்தில் முத்துப்பாண்டி உயிரிழந்த நிலையில், மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.