சிறந்த அரசு மருத்துவமனைகளுக்கான மத்திய அரசின் காயகல்ப மதிப்பீட்டில், 2023-ம் ஆண்டில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதலிடமும், செங்கோட்டை அரசு மருத்துவமனை இரண்டாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளது.
மருத்துவமனையின் சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் உள்ள 35 அரசு மருத்துவமனைகள் மதிப்பீடு செய்யப்பட்டன.
இதில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 92.57 புள்ளிகள் பெற்று, முதல் பரிசான 50 லட்சம் ரூபாயைத் தட்டிச் சென்றுள்ளது.
இந்த பரிசுத் தொகை, பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும், மருத்துவமனையின் வளர்ச்சி பணிகளுக்கும் செலவிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.