ஐ.டி. துறைக்கான மடிக்கணினி மற்றும் கணினி தயாரிப்புக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய சிறப்புத் திட்டத்தால் 50 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.
ஐடி துறையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மடிக்கணினி, மற்றும் கணினியை பயன்படுத்தும் வகையில் சிறப்புத் திட்டத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை கடந்த ஆண்டு அறிவித்தது. இத்திட்டத்தின்கீழ் தேர்வான 27 நிறுவனங்களில், 6 நிறுவனங்கள் கடந்த ஆண்டில் உற்பத்தியைத் தொடங்கிவிட்டதாகவும், 17 நிறுவனங்கள் நிகழாண்டில் உற்பத்தியைத் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் 50 ஆயிரம் பேருக்கும் நேரடியாகவும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அந்தத் துறையின் செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.