சிவகங்கை மாவட்டம் பழமலை நகரில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 2 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 400-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி 414 மதிப்பெண்களும், தனுஷ் 412 மதிப்பெண்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நரிக்குறவர் இன மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஆசிரியர்களும், பொதுமக்களும் 2 மாணவர்களுக்கும் சால்வை அணிவித்தும், இனிப்புகளை ஊட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.