தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, கூட்டுறவு சங்கத்தில் தேன் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியுள்ளதாக, கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேன் விவசாயத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்று வருகின்றனர். ஆண்டுக்கு 15 லட்சம் கிலோ தேனை விவசாயிகள் உற்பத்தி செய்து வருகின்றனர். தேனின் அடர்த்தியை காரணம் காட்டி, மார்த்தாண்டம் தேன் விவசாயிகள் கூட்டுறவு சங்கம் கொள்முதல் செய்ய மறுத்து வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேன் விவசாயிகள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இது தொடர்பாக, தமிழ் ஜனம் தொலைக்காட்சியில், சிறப்பு செய்தித்தொகுப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து, மூன்று லட்சம் கிலோ தேனை அடர்த்தி ஆய்வு செய்து கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.