பயணிகள் மற்றும் சக ஊழியர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில், பிற மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு தமிழில் பேச பயிற்சி அளிக்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.
தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் சுமார் 5 ஆயிரத்து 87 கி.மீ., துாரத்திற்கு ரயில்களை இயக்கப்பட்டு வருகிறது. இங்கு பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்கள், பிற மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருப்பதால், உள்ளூர் மொழி தெரிவதில்லை.
இதனை அறிந்த ரயில்வே நிர்வாகம் மக்களுக்கும், நிர்வாகத்துக்கும் சிறந்த முறையில் சேவை வழங்க தமிழ், மலையாளம் போன்ற பிராந்திய மொழி அறிவை, பிற மாநில ஊழியர்கள் பெறுவது அவசியம் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் பிராந்திய மொழிகளை கற்க உதவும் ‘பாஷா சங்கம்’ செயலியை பயன்படுத்துவது தொடர்பான யோசனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.