திருப்பூர் அருகே கிரெடிட் கார்டு மோசடி காரணமாக பனியன் நிறுவன தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
நல்லூர் 2-வது வீதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனது கிரெடிட் கார்டை திருப்பி ஒப்படைக்க எண்ணினார். அப்போது வங்கியிலிருந்து பேசுவதாக தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், அவரது தொலைபேசி எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணைத் தெரிவித்தால், கிரெடிட் கார்டு கணக்கு முடித்து வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பிய பிரகாஷ் ஓடிபி எண்ணைக் கூறிய நிலையில், அவரது கிரெடிட் கார்டிலிருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வாங்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.
இதுகுறித்து சைபர் கிரைமில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.