பெண் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் தலைமை செய்தி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் யூட்யூபர் சவுக்கு சங்கர் அவதூறு பேட்டியின் நேர்காணலை ஒளிபரப்பியதற்காக ரெட்பிக்ஸ் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியில் உள்ள பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா சேர்மனிடம் ஃபெலிக்ஸ் ஜெரால்டு மனு அளிக்க சென்ற போது தமிழ்நாடு தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
இதையடுத்து அவரை ரயில் மூலம் திருச்சி அழைத்து வர உள்ளதாககாவல்துறையினர் தெரிவித்தனர்.