நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த இரட்டையர்கள், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.
ராசிபுரம் பகுதியை சேர்ந்த அக்சயா, அகல்யா என்ற இரட்டையர்கள் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர்.
தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இருவரும் 463 மதிப்பெண் பெற்று ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
ஒரே பள்ளியில் படித்து வந்த இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.