யுடியூபர் சவுக்கு சங்கரை 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யபட்ட யூடியூபர் சவுக்கு சங்கர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் மீதுள்ள 3 வழக்குகள் தொடர்பாக சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஊழல் நடந்ததாக, ஆதாரம் இல்லாமல் வீடியோ வெளியிட்ட வழக்கில் சவுக்கு சங்கரை 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
















