கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நபர், தரையில் படுத்துக்கொண்டு பாம்பு போல் ஊர்ந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நதியபட்டி கிராமத்தைச் சார்ந்த ஜெயக்குமார் என்பவர் தனது சொத்துக்களை மீட்டுத் தருமாறு விருத்தாச்சலம் வட்டாட்சியரிடம் மனு அளிக்க வந்தார்.
அப்போது அவர் திடீரென அருள் வந்தது போல் ஆவேசமானதோடு, பாம்பு போல் தரையில் படுத்துக்கொண்டு, வளைந்து நெளிந்தபடி வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் சென்றார்.
அதிகாரிகள் அவரை மீட்டு சுயநினைவுக்குக் கொண்டு வந்த பின்னர், விருத்தாச்சலம் வட்டாட்சியரிடம் மனு அளித்தார்.