ஈரோடு மாவட்டம், வேப்பம்பாளையத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தினார்.
வேப்பம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆய்வில் ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை ஆகிய மூன்று வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளிகளுக்கான வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அப்போது வாகனங்களின் வேக கட்டுப்பாட்டு கருவி, தீ அணைப்பு உபகரணங்கள், முதலுதவி உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.