ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் நகைகளை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தொண்டி பகுதியைச் சேர்ந்தவர் வசந்தம் என்ற மூதாட்டி, இவருடைய நண்பரான சிவகாமி என்ற பெண் மூதாட்டியை பார்க்க வந்து விட்டு இரவு அங்கேயே தங்கியுள்ளார்.
பின்னர் காலை எழுந்ததும் வசந்தம் அணிந்திருந்த 18 பவுன் நகைகளுடன் சிவகாமி மாயாகியுள்ளார்.
பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில் சிவகாமியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தனர்.