தமிழக அரசு மக்களின் தேவையை பூர்த்தி செய்யாத அரசாக இருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆழ்வார்பேட்டை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் மாறன் திருவுருவப்படத்தை ஜி.கே.வாசன் திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மக்களின் தேவையை பூர்த்தி செய்யாத அரசாகவும், சட்டம்- ஒழுங்கு குறித்து கண்டுகொள்ளாத அரசாகவும் திமுக அரசு உள்ளது என தெரிவித்தார். செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், கஞ்சா கடத்தலை தடுக்க தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமானதாக இல்லை எனவும் வாசன் குற்றம் சாட்டினார்.