சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.
அட்சய திருதியை ஒட்டி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 240 ரூபாய் உயர்ந்து, 54 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 160 ரூபாய் குறைந்து, 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 750 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து 90 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.