மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை கட்சித் தொண்டர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக, 2024-ம் ஆண்டிற்கான பத்மபூஷன் விருதை விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிடம் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
விருது பெற்றுக்கோண்டு சென்னை திரும்பிய பிரேமலதா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பத்மபூஷன் விருதை கட்சி நிர்வாகிகளுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றும், இதனை விஜயகாந்தே பெற்றிருந்தால் இன்னும் பெருமையாக இருந்திருக்கும் எனவும் தெரிவித்தார்.
















