மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வென்றால் அமித் ஷா பிரதமர் ஆவார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதை உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பாஜக சட்டத்திட்டத்தில் இதுதொடர்பாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்றார். மேலும், நாட்டை பிரதமர் மோடி தான் தொடர்ந்து வழிநடத்துவார் என்றும், பாஜகவில் எந்தவொரு குழப்பமும் இல்லை எனவும் அமித் ஷா, தெரிவித்தார்.