கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கஞ்சா செடி வளர்த்த வடமாநிலத்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஆனேகொலு என்ற இடத்தில் மாட்டுத் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்நிறுவனத்தில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், சுமார் ஆறு அடி உயரமும், 10 கிலோ எடையும் உடைய கஞ்சாச் செடியை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், தப்பியோடிய பீகாரைச் சேர்ந்த புக்கர் யாதவ் என்பவரை கைது செய்தனர்.