மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மட்டங்கிபட்டி கண்மாயில் சமத்துவ மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
இதில் சிங்கம்புணரி, நத்தம், சிவகங்கை,திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.
பல்வேறு மீன் பிடி உபகரணங்களோடு வந்தவர்கள் கண்மாய்க்குள் இறங்கி போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர்.
அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக சேர்ந்து மீன்பிடி திருவிழா நடத்துவதால் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.