தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கடைக்காரர்களிடம் 100 ரூபாயை கொடுத்துவிட்டு 500 ரூபாய் கொடுத்ததாக கூறி நூதன முறையில் பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளத்தில் சிலர் உணவு அருந்திவிட்டு, உரிமையாளர்களின் கவனத்தை திசைத்திருப்பி 100 ரூபாய் கொடுத்துவிட்டு, 500 ரூபாய் கொடுத்ததாக கூறி சில்லரை வாங்கி ஏமாற்றியதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் மதுரையை சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.