திண்டுக்கல் மாவட்டத்தில் கொலை செய்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
பல்லடத்தில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றி வந்த பிரின்சிக்கும், அவருடன் பணியாற்றிய திவாகர் என்பவருக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது.
திவாகரை பணம் கேட்டு பிரின்சி தொல்லை செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த திவாகர் தனது உறவினரான இந்திரக்குமாருடன் இணைந்து பிரின்சியை கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து உடலை புதைக்க நினைத்த திவாகர், தனது காரில் பிரின்சியின் உடலை எடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார், காரை சோதனையிட்டபோது பெண்ணின் உடல் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் காரை பறிமுதல் செய்தனர்.