குஜராத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் நடனமாடி தேர்வு தங்கள் மகிழச்சியை ஏற்படுத்தினர்.
குஜராத்தில் இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியம் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இதில் 86.69 சதவிகித மாணவர்களும், 79.12 சதவிகித மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மொத்த தேர்ச்சி விகிதம் 82.56 ஆக உள்ளது. இதனையடுத்து, ராஜ்கோட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் நடனமாடி தேர்வு முடிவுகளை வரவேற்றனர்.