காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஶ்ரீ ராமானுஜரின் 1007 வது அவதாரத்தை ஒட்டி பழமை வாய்ந்த ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு உற்சவ விழா கடந்த 2ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது.