ஆந்திர பிரதேசத்தில் உரிய ஆவணங்களின்றி மினி வேனில் கொண்டு செல்லப்பட்ட 7 கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நல்லஜார்லா பகுதியில் சென்றுகொண்டிருந்த லாரி, மினி வேன் மீது மோதியது.
அப்போது மினி வேனில் இருந்த பணம் சாலையில் சிதறியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் உரிய ஆவணங்களின்றி மினி வேனில் 7 கோடி ரூபாய் பணம் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.
பணத்தை பறிமுதல் செய்த போலீசார் வேன் ஓட்டுநரை கைது செய்தனர்.