தஞ்சை மாவட்டம், கும்பகோணம் இருப்புப் பாதை போலீசார், விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
ரயில் நிலையம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியின்போது, பெண்களை போற்றுவோம், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை எதிர்ப்போம் என்று முழக்கங்களை வைத்து ரயில் பயணிகள் மற்றும் பேருந்து பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
மேலும், ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ வேண்டாம் என்றும், தண்டவாளங்களில் நின்று செல்பி எடுக்க வேண்டாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.