குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 82 புள்ளி 56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குஜராத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு இன்று காலை வெளியானது. இதில், 82 புள்ளி ஐந்து ஆறு சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 18 சதவீதம் அதிகம் என்றும் அம்மாநில பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக தேர்வு எழுதிய 6 லட்சத்து 99 ஆயிரத்து 598 மாணவர்களில், 5 லட்சத்து 77 ஆயிரத்து 556 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.