ஊட்டி மலர் கண்காட்சியின் இரண்டாவது நாளையொட்டி, ஏராளமான சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை உற்சாகமாக கண்டு களித்தனர்.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126 -ஆவது மலர் கண்காட்சி, வரும் 20 -ஆம் தேதி வரை, மொத்தம் 10 நாட்கள் நடைபெறுகிறது.
இதற்காக தயார் செய்யப்பட்ட 45 ஆயிரம் மலர் தொட்டிகளில் ஜெரேனியம், பால்சம், லிசியான்தஸ் மற்றும் புதிய ரக பூக்களான ஓரியாண்டல், லில்லி போன்ற மலர்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், 30 அடி உயரத்திற்கு பிரமாண்ட நுழைவு வாயில்களும், டிஸ்னி வேர்ல்ட் மற்றும் உதகை மலை இரயில் உள்ளிட்ட மலர் அலங்கராங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக, இறுதி நாளில் இரவு நேரத்தில் லேசர் லைட் ஷோ நடைபெற உள்ளது.