கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து இளைப்பாற குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், விடுமுறை காலம் என்பதாலும் குமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். திற்பரப்பு அருவியில் அதிக நேரம் செலவிடும் சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்கின்றனர்.
அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் கன்னியாகுமரியில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையை காண வந்த சுற்றுலா பயணிகள் அதன் கட்டடக்கலையை கண்டு ரசித்தனர். கோடை விடுமுறை என்பதால் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள் அரண்மனையின் கட்டடக்கலையை கண்டு ரசித்தனர். அதேபோல அரண்மனையின் உள்ளே அமைந்துள்ள மந்திரசாலை, தாய்க் கொட்டாரம், நாடகசாலை, நான்கடுக்கு மாளிகை உள்ளிட்டவற்றையும் வியப்புடன் கண்டுகளித்தனர்.