ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை கொல்கத்தா வீழ்த்தியது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 16 ஓவர்களின் முடிவில் 157 ரன்கள் குவித்தது.
158 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய மும்பை அணி 139 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் நடப்பு தொடரில் முதல் அணியாக கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 61-வது லீக் ஆட்டத்தில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. அதேபோல இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 62-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு – டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.