டெல்லியில் ஏற்பட்ட கடும் புழுதிப்புயலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
திடீர் வானிலை மாற்றம் காரணமாக டெல்லியில் மணிக்கு 77 கிலோ மீட்டர் வேகத்தில் புழுதிப் புயல் வீசியது. இந்த புயலில் ஏராளமான மரங்கள் மற்று மின்கம்பங்கள் விழுந்து சேதம் அடைந்தன.
30 நிமிடங்கள் நீடித்த இந்த புயலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 23 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் சேதமடைந்த வீடுகள் மற்றும் மின்கம்பங்களை மீட்புப்படையினர் சீரமைத்து வருகின்றனர்.