வார விடுமுறையை ஒட்டி நீலகிரி மாவட்டத்திற்கு ஒரே நாளில் சுமார் 33 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கடந்த 7-ம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது.
கடந்த 7 நாட்களில், சுற்றுலா மற்றும் வணிக ரீதியாக பயணிக்க ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 397 வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று, 5 லட்சத்து 87 ஆயிரத்து 394 பேர் பதிவு செய்துள்ளனர்.
அதன்படி நேற்று மாலை வரை 6 ஆயிரத்து 693 வாகனங்கள் மூலம் 33 ஆயிரத்து 461 பேர் நீலகிரிக்கு வருகை புரிந்துள்ளனர்.