பீகார் மாநிலம் பெகுசராய் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் லக்கிசாரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஒரு வாக்கு காரணமாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
வாக்களாகர்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஏழைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.