ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு குண்டூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.
தம்முடைய அரசியல் வாழ்வில் இதுபோன்ற கூட்டத்தை பார்த்ததில்லை என்றும், பெங்களூரூ, சென்னை மற்றும் அமெரிக்கா, உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிக்க பலர் வருகை தந்துள்ளதாக தெரிவித்தார்.
ஜனநாயத்தை பாதுகாக்க வேண்டும் என வாக்காளர்கள் நினைப்பதாகவும் சந்திரபாபு நாயுடு கூறினார்.