தெலுங்குதேசம் கட்சி சார்பில் குண்டூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் சந்திரசேகர் பெம்மாசானிக்கு 5785 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
அசையும் சொத்தாக 5 ஆயிரத்து 598 கோடியும் அசையா சொத்து.106 கோடி ரூபாயும் உள்ளதாகவும், சுமார் ஆயிரத்து 38 கோடி கடன் இருப்பதாகவும் வேட்பு மனுவில் அவர் தெரிவித்து உள்ளார்.
48 வயதாகும் பொம்மாசானி மருத்துவம் படித்தவர். நான்காம் கட்ட தேர்தலில் போட்டியிடும் ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களில் 476 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்.
24 வேட்பாளர்கள் தங்களிடம் எந்த சொத்தும் இல்லை என்றும் அறிவித்து உள்ளனர்.