ஐபி.எல் கிரிக்கெட் தொடரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல். தொடரின் 61-வது லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
அப்போது 20 ஒவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை மட்டுமே அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது ஆட்டமிழந்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங் அணி 18.2 ஓவர்களில் 145 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.