17-வது ஐ.பி.எல். தொடரின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
12 ஆட்டங்களில் 5 வெற்றி மற்றும் 7 தோல்விகளை கண்ட குஜராத் அணிக்கு மற்ற அணிகளின் முடிவு சாதகமாக அமைந்தால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைய முடியும் நிலை உள்ளது.
அதே சமயம் கடந்த ஆட்டங்களில் கொல்கத்தா அணி, 9 வெற்றி, 3 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தைக்காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.