கோவில்பட்டி அருகே ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எட்டயபுரத்தை சேர்ந்த மாரிமுத்து தனது மனைவியுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம், ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் கண்ணன், இருசக்கர வாகனத்தில் பயணித்த நந்தா ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.