கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ல் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஆம்புலன்சின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்தது.
பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மயான பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாக்கினாபட்டி பாபு என்பவருக்கு சொந்தமான டெம்போ ட்ராவலர் ஆம்புலன்ஸ் திடீரென தீபற்றி எரிந்தது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் ஆம்புலன்ஸின் முன்பகுதி முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது.