தென்காசியில் உள்ள ஸ்ரீ ராமர் திருப்பதி திருக்கோவிலில் சீதாராமர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆலங்குளம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ ராமர் திருப்பதி திருக்கோவில் திருக்கல்யாண நிகழ்வையொட்டி, கோயிலில் உள்ள அனைத்து சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டன.
இதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.