ராமநாதபுரத்தில் பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே நடைபெற்ற நல்லுறவு கிரிக்கெட் போட்டியில், காவல்துறை அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மாவட்ட காவல்துறை அணியும், ஊர்க்காவல்படை அணியும் மோதின.
முதலில் ஆடிய காவல்துறை அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் குவித்த நிலையில், ஊர்க்காவல் படை அணி 20 ஓவர்களில் 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.