விருதுநகர் மாவட்டம், செங்கமலப்பட்டியில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆறுதல் கூறினார்.
பின்னர் வெடிவிபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த துரை வைகோ, விதிமீறல்களில் ஈடுபடும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.