பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஹரிமந்திர் பாட்னா சாஹிப் குருத்வாராவில் இன்று காலை பிரார்த்தனை மேற்கொண்ட பிரதமர் மோடி, அனைவருக்கும் லாங்கர் எனப்படும் சமபந்தி உணவை பரிமாறினார்.
இதைத்தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஹஜிபூர், முசாஃபர் நகர், சரண் ஆகிய தொகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.