ஹைதராபாத்தில் எரிந்துகொண்டிருந்த பைக் மீது தண்ணீர் ஊற்றியபோது பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புல்லட் ஒன்று திடீரென தீப்படித்து எரிந்தது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பைக்கின் டேங்க் வெடித்து சிதறியது. இதில் படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.