சீனாவுடனான எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புவதாக என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகவும், இதனால் பொருளாதார முன்னணியில் உள்ள சீனாவுடன் போட்டியிட முடியும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுடன் எஞ்சியிருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.