கன மழை காரணமாக தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள சுரங்கபாதையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
ஆண்டிப்பட்டியிலிருந்து தொப்பம்பட்டி செல்லும் சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
இதனால் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்தனர். தேங்கிய தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.